நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்காகவும் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்காகவும் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 7:37 pm

நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்காகவும் இலவசக் கல்வியை வலுப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு விசாகா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

1971 ஆம் ஆண்டு ஜெரமியஸ் டயஸினால் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு விசாகா கல்லூரி, நீண்டாகால வரலாற்றைக்
கொண்ட அரச பெளத்த மகளிர் கல்லூரியாகும்.

பாடசாலையின் நூற்றாண்டு விழாவின் ஞாபகார்த்தமாக வெளியிடப்பட்ட நாணயம், மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது ஜகாதிபதி கருத்து தெரிவிக்கையில்…

[quote]நீங்கள் நேற்று பிற்பகல் ஊடகங்கள் வாயிலாக பார்த்திருப்பீர்கள்.14, 15 வயதுடைய பிள்ளைகள் ஐவர், தாங்கள் செல்லும் இடத்தை தத்தமது வீடுகளுக்கு கூறாது வகுப்பு செல்வதாக கூறி கம்பளைக்கு சென்று மகாவலி ஆற்றில் குளித்தபோது ஐவரில் மூவர் நேற்று உயிரிழந்துள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது எவ்வாறான ஒரு அனர்த்தம். எவ்வளவு தூரம் பிள்ளைகள் தொடர்பில் பொறுப்புடன் உள்ளனர் என்பது பிரச்சினையாகவுள்ளது. பிள்ளைகளின் வயது, எண்ணம், அவர்களின் எதிர்பார்ப்பினை வலுப்படுத்துதல் மற்றும் பிள்ளைகளின் அழகிய வாழ்வினை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து பாடசாலை ஆசிரியர்கள் அன்றி, அதுகுறித்து புரிந்துணர்வில்லாது பெற்றோர்களே அந்த பொறுப்பிலிருந்து விலிகியிருக்கின்றனர் என்பதே எனது நிலைப்பாடாகும்.[/quote]

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்