காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதம்

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் சாகும்வரை உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

23 Jan, 2017 | 7:55 pm

காணாமல் போனவர்களை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் தேங்காய் உடைத்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஏ -09 வீதியிலுள்ள வவுனியா தபாலகத்திற்கு அருகில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும்வரையான உண்ணாவிரத போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருகோணமலையிலும் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.

காணமற்போணவர்களின் உறவினர்களினால் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்