சந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது

சந்தையில் அரிசியின் விலை குறைவடைந்துள்ளது

எழுத்தாளர் Staff Writer

22 Jan, 2017 | 4:10 pm

சந்தையில் அரிசியின் விலை இரண்டு ரூபா தொடக்கம் நான்கு ரூபா வரை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய நடவடிக்கை மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேவையான அளவு அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளமையால் இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய நடவடிக்கை மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விற்பனை மற்றும் உணவு, விவசாய வர்த்தக பிரிவின் பிரதானி துமிந்த பிரியதர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் மற்றும் சில்லரை விலைகளுக்கு அரிசியை விநியோகிக்கும் சந்தைகளுக்கு அரசினால் தேவையான அளவு அரிசி விநியோகிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய உள்ளூர் நாடு அரிசி ஒரு கிலோகிராம் இரண்டு ரூபாவால் குறைவடைந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்