வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன

வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 3:19 pm

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக சக்தி, சிரச, TV1, MBC மற்றும் நியூஸ்பெஸ்ட் முன்னெடுத்துள்ள நிவாரண யாத்திரைக்கு தேவையான பொருட்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பு – 2, பிரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ள MTV/MBC ஊடக நிறுவனத்தின் தலைமையகத்திலும், இரத்மலானை ஸ்டையின் கலையகம், அரலிய உயன தெபானம கலையகம் மற்றும் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஹரிஸன்ஸ் நிறுவனம் ஆகியவற்றிலும் உங்களுடைய நிவாரணப் பொதிகளைக் கையளிக்க முடியும்.

இன்று இரவு வரை நிவாரணப்பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை நிவாரணப்பொருட்களை விநியோகிப்பதற்கான பயணம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

மேலதிக தகவல்களுக்காக 011 – 4 896 896 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம்.

 

16105916_1383125645081023_691384157970995575_n 16114012_1383125621747692_5031978596322713961_n 16114646_1383125678414353_2046079432562120418_n 16143184_1383125995080988_6600948905314599120_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்