வறட்சிக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உலக உணவுத்திட்டம் உறுதி

வறட்சிக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உலக உணவுத்திட்டம் உறுதி

வறட்சிக்கு முகங்கொடுக்கும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உலக உணவுத்திட்டம் உறுதி

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 3:05 pm

வறட்சி காரணமாக எதிர்நோக்கப்படும் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் உறுதியளித்துள்ளது.

உலகப் பொருளாதார மாநாட்டின் போதே ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் எதரின் கொஷி இந்த உறுதிமொழியை வழங்கியதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உலக உணவுத்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது, இலங்கை அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வமான திட்டங்களை உலக உணவுத்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் பாராட்டியுள்ளார்.

வறட்சியால் குறிப்பாக விவசாயத்திற்கும் மின் உற்பத்திக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி உலக பொருளாதார மாநாட்டின் போது ஆராயப்பட்டுள்ளது.

வறட்சி நிலை நீடித்தால் நுகர்விற்காக அரிசியையும், மின் உற்பத்திக்காக டீசலையும் இறக்குமதி செய்ய நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தை மாத்திரம் முழுமையாக நம்பியுள்ள மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்