முன்னாள் கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பிணையில் விடுதலை

முன்னாள் கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 3:38 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவிற்கு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

25 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் சரத்குமார குணரத்னவை விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 12 மில்லியன் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் சரத்குமார குணரத்னவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

சரத்குமார குணரத்ன உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்