பொலிஸ் திணைக்களத்தில் கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானம்

பொலிஸ் திணைக்களத்தில் கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானம்

பொலிஸ் திணைக்களத்தில் கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 3:31 pm

பொலிஸ் திணைக்களத்தில் கீழ்மட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கான பதவி உயர்வு மற்றும் கொடுப்பனவு முறையில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் சார்ஜன் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளிலுள்ள 84,000 உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் பீ.எச்.மனதுங்க தெரிவித்தார்.

தற்போது அவர்கள் பாரிய மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலைமையானது பொலிஸ் உத்தியோகத்தர்கள் திறம்பட பணிபுரிவதற்கு இடையூறாக இருப்பதாகவும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

எனவே, இந்த உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதுடன், கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்