கொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் ஓரளவு பூர்த்தி

கொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் ஓரளவு பூர்த்தி

கொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் ஓரளவு பூர்த்தி

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 7:16 pm

நாட்டில் நிர்மாணிக்கப்படும் பாரிய திட்டமான கொழும்பு துறைமுகத் திட்டத்தின் காணி நிரப்பும் பணிகள் 28 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் ஊடாக 269 ஹெக்டேயர் கடற்பரப்பு நிரப்பப்பட்டு, துறைமுக நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இந்த நகரத்திற்குள் நிதி நிலையம், ஹோட்டல்கள், வீட்டுத்திட்டங்கள், பூங்காக்கள், கப்பல்கள் நங்கூரமிடப்படும் தளம்,
கடற்கரையுடனான புதிய நகரமொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது கடலை நிரப்பும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், 28 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்தது.

கொழும்பு துறைமுக நகரத்தின் நிர்மாணப்பணிகளை மாநகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
சம்பிக்க ரணவக்க கண்காணித்தார்.

கடந்த காலப்பகுதியில் இந்த திட்டம் தொடர்பில் எழுந்த சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்டதன் பின்னர், அந்த நிர்மாணப்பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நீர்கொழும்பு – சிலாபத்தை அண்மித்த 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கடற்பரப்பில் இருந்தே, கடலை நிரப்புவதற்கான மணல் பெறப்படுகின்றது.

அதற்காக பயன்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடனான கப்பலைப் பார்வையிடுவதற்கு நேற்று ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் துறைமுக திட்டத்தின் முதற்கட்டமான காணி நிரப்பும் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்