உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக்

உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக்

உணவு, நீர், தொப்பியுடன் மெரினா விரைந்த விவேக்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 5:25 pm

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து நான்காவது நாளாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கான உணவு, நீர், தொப்பிகளுடன் மெரினா விரைந்துள்ளார் நடிகர் விவேக்.

அவர்களின் மருந்துச் செலவுகளுக்காக 2 இலட்சம் ரூபா பணமும் எடுத்துச் சென்றுள்ளார்.

கொளுத்தும் வெயிலில் இளம் தலைமுறையினர் போராடுவதைப் பார்த்த விவேக், தன்னிடம் உள்ள ஆயிரக்கணக்கான கிரீன் கலாம் தொப்பிகளை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்.

இளைஞர்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து அவர் நடிகர் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்