ஈரானில் தீ பரவிய கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி

ஈரானில் தீ பரவிய கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி

ஈரானில் தீ பரவிய கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 30 தீயணைப்பு வீரர்கள் பலி

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 4:49 pm

ஈரானில் பழமையான கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீயினை அணைத்துக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் மீது கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ”பிளாஸ்கோ பில்டிங்” எனும் 17 மாடிக்கட்டிடத்தில் நேற்று (19) அதிகாலை தீ பரவியது.

9 ஆவது மாடியில் பற்றிய தீ, மற்ற மாடிகளுக்கும் பரவியது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் வாகனங்களில் விரைந்து சென்றனர்.

நீரைப் பீய்ச்சி, தீயை அணைக்க பல மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடினர்.

தீயினால் பலமிழந்த கட்டிடம் திடீரென இடிந்து விழத் தொடங்கியது.

இதில் தீயை அணைத்துக்கொண்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இடிபாட்டில் சிக்கிய கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் என 38 பேர் காயமடைந்துள்ளனர்.

 

Firefighters battle a blaze that engulfed Iran's oldest high-rise, the 15-storey Plasco building in downtown Tehran on January 19, 2017. State television said 200 firefighters had been called to the scene and 38 had already been injured battling the blaze before it fell. / AFP PHOTO / STR

3

5

6


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்