இதயத் துடிப்பே கடவுச்சொல்: புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

இதயத் துடிப்பே கடவுச்சொல்: புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

இதயத் துடிப்பே கடவுச்சொல்: புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 5:04 pm

இணையவழி மருத்துவத்தின்போது தனிநபரின் உடல்நலம் பற்றிய மின்னணுத் தகவல்களைப் பாதுகாப்பதற்காக, அவரது இதயத் துடிப்பையே கடவுச்சொல்லாக (பாஸ்வேர்ட்) பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

தற்போது தகவல்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படும் “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு மிக்கவையாகவும் உள்ளன.

இணையவழி மருத்துவம், செல்பேசி மூலமான மருத்துவம் போன்றவற்றின்போது, இரகசியத் தகவல்களைப் பாதுகாக்க அத்தகைய பாரம்பரியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, “என்க்ரிப்ட்’ தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, எளிமையான, மலிவான, மருத்துவத் துறைக்கென்று பிரத்தியேகமான தகவல் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக பிங்கம்டன் பல்கலைக்கழக பேராசியர் ஷன்பெங் ஜின் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நோயாளியின் “இசிஜி’ பரிசோனை வரைபடத்தை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விவரங்களைப் பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக, நோயாளிகளின் உடல்நிலையை அறிந்துகொள்ள “இசிஜி’ பரிசோதனைதான் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, அந்தப் பரிசோதனை வரைபடத்தை கடவுச்சொல்லாகப் பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என பேராசிரியர் ஷன்பெங் ஜின் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்