களனி கங்கையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

களனி கங்கையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

களனி கங்கையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2017 | 8:03 am

களனி கங்கையை அசுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கு பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அவிசாவளை முதல் கொழும்புக்கு இடைப்பட்ட களனி ஆற்றுப்பரப்பிற்கு அசுத்த நீரை வெளியேற்றும் 90 குழாய்கள் விடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

இதனால் 12 பொலிஸ் நிலையங்களை ஒன்றிணைத்து குறித்த குழாய்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அசுத்த நீரை வெளியேற்றும் குழாய்களை களனி ஆற்றுக்கு விடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்