GSP+ விடயத்தில் சர்வசே தரத்திலான 27 மரபுகளின் நடைமுறை குறித்தே ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

GSP+ விடயத்தில் சர்வசே தரத்திலான 27 மரபுகளின் நடைமுறை குறித்தே ஐரோப்பிய ஒன்றியம் கவனம்

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2017 | 6:16 pm

இலங்கைக்கு GSP+ வரிச்சலுகை வழங்கும் விடயத்தில், சர்வசே தரத்திலான 27 மரபுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பது தொடர்பில் மாத்திரமே கவனம் செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்திய நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக இலங்கை முன்னெடுத்த தலைமைத்துவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், GSP+ வரிச்சலுகையை வழங்கத் தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக முன்வைத்த விண்ணப்பத்தின் பிரகாரம், இலங்கையின் மனித உரிமைகள், தொழிலாளர்கள் உரிமைகள், சூழல் பாதுகாப்பு மறறும் நல்லாட்சி தொடர்பிலான 27 சர்வசே மரபுகளை நடைமுறைப்படுத்துவதில் கண்டுள்ள முன்னேற்றம் மாத்திரமே கவனத்திற் கொள்ளப்பட்டதாக ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கம் குறித்த விடயங்களை நடைமுறைப்படுத்தும் போது அதனைக் கண்காணிப்பதற்கும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்