ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டின் பிளட்டினம் விருது வழங்கல் விழா நடைபெறவுள்ளது

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டின் பிளட்டினம் விருது வழங்கல் விழா நடைபெறவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2017 | 9:09 pm

இலங்கையின் வீர வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை கௌரவிக்கும் ஸ்போர்ட்ஸ் பெஸ்ட்டின் பிளட்டினம் விருது வழங்கல் விழா இம்முறையும் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது.

அது குறித்து தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய வீர வீராங்கனைகளைக் கௌரவிக்கும் நோக்கில், இலங்கையில் இலத்திரனியல் ஊடக நிறுவனம் ஒன்று முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள விருது வழங்கல் விழாவாக பிளட்டினம் விருது வழங்கல் விழா திகழ்கிறது.

2014 ஆம் ஆண்டு முதன்முறையாக நடைபெற்ற பிளட்டினம் விருது வழங்கல் விழாவைப் போன்று இம்முறையும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விருது வழங்கல் விழா தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய நிகழ்வில் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

பிரதான 20 விளையாட்டு விருதுகள், 10 மதிப்பீட்டு விருதுகள், வாழ்நாளில் ஒரு முறை வழங்கப்படும் பிளட்டினம் விருது என்பன இதில் அடங்குகின்றன.

பிரதான 20 விருதுகளில் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, வருடத்தின் சிறந்த வீரர், வீராங்கனை, ஜனரஞ்சக வீரர் மற்றும் வீராங்கனை ஆகியோருக்கான விருதுகளும் உள்ளடங்குகின்றன.

கொழும்பு 02 இல் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் பிரதான காரியாலயம், விளையாட்டுத்துறை அமைச்சு, விளையாட்டு சங்கங்களின் தலைவர்கள் மற்றும் www.sportsfirst.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக விருதுகளுக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

வர்ணமயமாக நடைபெறவுள்ள இந்த விருது வழங்கல் விழாவில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் திலகரட்ன தில்ஷான், கிசு கோமஸ், ஜூலியன் போலின், தலவ் அலய்லாமா, அஜித் பெர்னான்டோ, தமயந்தி தர்ஷா, ஷிரியானி குலவன்ச, ருவன் கேரகெல போன்ற விளையாட்டு நட்சத்திரங்கள் நடுவர்களாக செயற்படவுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்