வஸ்கமுவ தேசிய சரணாலயத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

வஸ்கமுவ தேசிய சரணாலயத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

வஸ்கமுவ தேசிய சரணாலயத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2017 | 12:49 pm

வஸ்கமுவ தேசிய சரணாலயத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த சிலருக்கும் வன ஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சரணாலயத்திற்குள் பிரவேசித்திருந்த குறித்த குழுவினரை நேற்றிரவு சோதனைக்குட்படுத்த அதிகாரிகள் முயன்றுள்ளனர்.

இதன்போது வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் மீது அவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளும் குறித்த குழுவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சரணாலயத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்திருந்த 38 வயதான ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலத்திற்கு அருகிலிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்