வறட்சி தொடர்பில் அவசர தீர்மானங்களை எடுக்க விசேட குழு நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

வறட்சி தொடர்பில் அவசர தீர்மானங்களை எடுக்க விசேட குழு நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2017 | 6:30 pm

வறட்சியினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் வகையில், அவசர தீர்மானங்களை எடுப்பதற்காக அமைச்சின் செயலாளர்களை உள்ளடக்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் இன்று கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

அவசர தீர்மானங்களை எடுப்பதற்காக மின்சக்தி, மகாவலி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்குமாறு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வற்றியுள்ள குளங்களை புனரமைப்பு செய்வதற்காக திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்