மாயமான எம்.எச் 370 மலேசிய விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன

மாயமான எம்.எச் 370 மலேசிய விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன

மாயமான எம்.எச் 370 மலேசிய விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2017 | 10:17 am

கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 ஐ தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது.

கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பீஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானத்திற்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை.

விமானம் இந்திய பெருங்கடலில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

அந்த விமானத்தை தேடி கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் கூட்டாக முயற்சிகள் மேற்கொண்டன. நவீன தொழில்நுட்பங்கள் பின்பற்றப்பட்டன. ஆனால் எந்தப் பலனும் இல்லை.

இந்நிலையில், நீருக்கடியில் விமானத்தை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த சீனா, அவுஸ்திரேலியா மற்றும் மலேசிய நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் இதனை கூட்டறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே தேடுதல் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதற்கு அதிருப்தி தெரிவித்த பயணிகளின் உறவினர்கள் ‘இது ஒரு பொறுப்பற்ற செயல்’ என்று கூறியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்