மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றிவருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றிவருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றிவருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2017 | 7:17 am

மீண்டும் ஒரு தடவை யுத்தம் ஏற்படுவதை தடுத்து மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்றிவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சமய மற்றும் கலாசார திணைக்களத்தின் புதிய கலாசார மத்திய நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் இன, மத, கலாசார தனித்துவம், சுதந்திரம், சலுகைகள் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம்.இந்த நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தவிர்த்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சூழலை உருவாக்குவதற்காகவே மக்கள் புதிய அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்தனர். கட்டங்களை அழகாக நிர்மாணிப்பதை விட ஆன்மீக ரீதியாக மத நல்லிணக்கத்த ஏற்படுத்த வேண்டியதே மிகவும் அவசியமானதாகும் என் இதன் போது ஜனாதிபதி தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்