நியூஸ்பெஸ்ட்டின் நிவாரணப்பயணம்: வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளன

நியூஸ்பெஸ்ட்டின் நிவாரணப்பயணம்: வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2017 | 8:20 pm

நாட்டில் தொடரும் கடும் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் சக்தி, சிரச, TV1, MBC மற்றும் நியூஸ்பெஸ்ட்டின் நிவாரணப்பயணம் மீண்டும் தொடரவுள்ளது.

நாளை காலை 8.30 மணியில் இருந்து நிவாரணப் பயணத்திற்கான பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கை பல இடங்களில் ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு 2, பிரேப்ரூக் பிளேஸில் உள்ள சக்தி, சிரச பிரதான அலுவலகம், ரத்மலானை ஸ்டைன் கலையகம், அரலிய உயன – தெபானம அலுவலகம் மற்றும் கொழும்பு டார்லி வீதியில் உள்ள ஹரிஸன்ஸ் நிறுவன அலுவலகம் என்பவற்றில் உதவிப்பொருட்கள் சேகரிக்கப்படவுள்ளன.

இரண்டு நாட்கள் உதவிப் பொருட்களை சேகரித்த பின்னர் எதிர்வரும் சனிக்கிழமை அவற்றை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக எடுத்துச் செல்ல வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்