சீகிரியா ஓவியங்கள் பாதிப்படையும் அபாயம்

சீகிரியா ஓவியங்கள் பாதிப்படையும் அபாயம்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2017 | 1:14 pm

சீகிரியா ஓவியங்களில் பரவியுள்ள பூஞ்சணம் காரணமாக ஓவியங்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீகிரிய சுவர்களில் காணப்படும் ஓவியங்களில் இந்த பூஞ்சணம் அதிகளவு பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றை அகற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசியர் பிரியஷாந்த குணவர்தன தெரிவித்தார்.

களனி பல்கலைக்கழகம் மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொளள்வுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் சீகிரியா குகையில் பல இடங்களிலும் இந்த பூஞ்சணம் பரவியுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்