ஐரோப்பிய பொதுச்சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும்: தெரசா மே அறிவிப்பு

ஐரோப்பிய பொதுச்சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும்: தெரசா மே அறிவிப்பு

ஐரோப்பிய பொதுச்சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும்: தெரசா மே அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

18 Jan, 2017 | 4:15 pm

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது, ஐரோப்பிய பொதுச்சந்தையிலிருந்தும் பிரிட்டன் விலகும் என அந்நாட்டின் பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகினாலும் பொதுச்சந்தையில் நீடிக்கும் யோசனையை பிரிட்டன் ஏற்காது எனவும் தனி நாடுகள் இடையே பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான இறுதி ஒப்பந்தம் பிரிட்டன் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விடப்படவுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்குமா, அல்லது அந்த அமைப்பின் உறுப்பு நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாமலேயே அமைப்பிலிருந்து விலகுமா என்பது குறித்து தெரசா மே எதுவும் தெரிவிக்கவில்லை.

ஐரோப்பிய பொதுச்சந்தையில் பிரிட்டன் தொடர்ந்தால், பிற ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கட்டுப்பாடற்ற அனுமதி வழங்க வேண்டியிருப்பதோடு, ஐரோப்பிய நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும் பிரிட்டன் கட்டுப்பட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்