உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை விரைவில் வர்த்தமானியில்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை விரைவில் வர்த்தமானியில்

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை விரைவில் வர்த்தமானியில்

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2017 | 8:40 am

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டுக் குழுவின் அறி்க்கையை ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் அறிவிக்கவுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையிலுள்ள சில விடயங்களை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தவிர எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் பிரதமர் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாகவும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் கூறியுள்ளார்.

சிறுபான்மை கட்சிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் தொடர்பிலான மேன்முறையீட்டுக் குழுவின் அறிக்கை நேற்று அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்