அரசியலில் தான் ஈடுபடுவது உறுதியென தீபா அறிவிப்பு

அரசியலில் தான் ஈடுபடுவது உறுதியென தீபா அறிவிப்பு

அரசியலில் தான் ஈடுபடுவது உறுதியென தீபா அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Jan, 2017 | 1:46 pm

அரசியலில் தான் ஈடுபடுவது உறுதியென மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா நேற்று அறிவித்தார்.

அ.தி.மு.க பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அவரது அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வரவேண்டும் என அ.திமு.கவில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளான நேற்று தீபா தனது அரசியல் பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என பலரும் எதிர்ப்பார்த்தனர்.

இந்நிலையில், தனது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த தீபா அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜெயலலிதாவின் பிறந்த தினமான எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

தம்மீது நம்பிக்கை வைத்து, தன்னை மக்கள் பணியாற்ற அழைப்பு விடுத்த தொண்டர்கள், மற்றும் மக்களுக்கு இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்