கணணிமயப்படுத்தப்பட்ட விலக்கல் சான்றிதழ்களை விநியோகிக்கும் நடைமுறை ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

கணணிமயப்படுத்தப்பட்ட விலக்கல் சான்றிதழ்களை விநியோகிக்கும் நடைமுறை ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Bella Dalima

17 Jan, 2017 | 9:37 pm

வணிக கப்பற்துறை செயலகத்தால் விநியோகிக்கப்படுகின்ற விலக்கல் சான்றிதழ்களை கணணிமயப்படுத்தப்பட்ட நடைமுறையின் கீழ் விநியோகிக்கும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வணிகக் கடலோடிகளைப் பதிவு செய்து விநியோகிக்கப்படுகின்ற விலக்கல் சான்றிதழ்கள் மற்றும் தராதரப் பத்திரங்களை பாதுகாப்பான முறையில், கணணிமயப்படுத்தி விநியோகிக்கும் இந்த செயற்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சர்வதேச கப்பல்களில் தொழிலுக்குச் செல்லும் கடலோடிகள் அனைவரும் இந்த விலக்கல் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

சான்றிதழ்களை விநியோகிக்கும் புதிய நடைமுறை காரணமாக, இதுவரை காலமும் வணிக கப்பல்களில் பணியாற்றும் கடலோடிகள், வணிகக் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்கள் சர்வதேச துறைமுகங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறைவடையும் என வணிகக் கப்பற்துறை செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்