மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுப்பு

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2017 | 8:35 pm

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின்,இரண்டாம் கட்டம் கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஸ்கந்தபுரம், ஸ்கந்தபுரம் மேற்கு மற்றும் விநாயகபுரம் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்ற மக்கள் சக்தி குழுவினர் மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்து கொண்டனர்.

இந்த பகுதிகளில் நிலத்தடி நீரில் சுண்ணாம்பு படிமங்கள் காணப்படுவதால் குடிநீருக்காக தாம் அல்லலுறுவதாக மக்கள் தெரிவித்தனர்.

குடி நீரை பெற்றுக் கொள்வதற்கு சுமார் மூன்று கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது.

விநாயகபுரம் குடியிருப்பில் எவ்வித உதவிகளுமின்றி அல்லற்படும் 81 வயதான தம்பத்தியினரை சந்திக்க முடிந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்