முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் கருவி பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் கருவி பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

முச்சக்கரவண்டிகளுக்கு மீற்றர் கருவி பொருத்துதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2017 | 2:58 pm

முச்சக்கரவண்டிகளுக்கு பணம் அறவிடுவதற்கான மீற்றர் கருவி பொருத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு வழங்குவதற்கான சலுகைகள் சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மீற்றர் கருவிகளைப் பொருத்தும் போது சிறந்த கட்டமைப்புகளைப் பொருத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.

இந்த செயற்பாடுகள் தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறைந்தது மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் மீற்றர் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் கூறினார்.

இந்த காலப்பகுதிக்குள் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கருவிகளைப் பொருத்தாத வாகன உரிமையாளர்களைக் கைது செய்வது தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்