திருகோணமலையில் புகைப்படம் எடுக்க முயற்சித்த யுவதி மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

திருகோணமலையில் புகைப்படம் எடுக்க முயற்சித்த யுவதி மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

திருகோணமலையில் புகைப்படம் எடுக்க முயற்சித்த யுவதி மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2017 | 3:58 pm

திருகோணமலை – புன்னையடி கிராமத்திலுள்ள மலைமேட்டிலிருந்து தவறி கடலில் வீழ்ந்து யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த அனர்த்தம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சக தோழிகளுடன் புகைப்படம் எடுக்க முயற்சித்த போதே குறித்த யுவதி கடலில் தவறி வீழ்ந்துள்ளார்.

நீரில் மூழ்கி உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வெருகல் – வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான யுவதியே உயிரிழந்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்