சேகரிக்கப்படும் பொலித்தீன், பிளாஸ்டிக் அதிகரிப்பு: புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை

சேகரிக்கப்படும் பொலித்தீன், பிளாஸ்டிக் அதிகரிப்பு: புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை

சேகரிக்கப்படும் பொலித்தீன், பிளாஸ்டிக் அதிகரிப்பு: புதிய சட்டத்தை உருவாக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2017 | 4:52 pm

உள்ளூராட்சி மன்றங்களால் சேகரிக்கப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்தது.

இந்த நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு கழிவகற்றல் நடவடிக்கைகளுக்கான முகாமைத்துவப் பிரிவொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவுப்பொருள் முகாமைத்துவப் பிரிவின் உதவி பணிப்பாளர் நாயகம் உபாலி இந்திரரத்ன குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் மாதத்திற்குப் பின்னரே அதிகளவான கழிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பரிந்துரை அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

அதற்கமைய இந்த விடயம் தொடர்பில் புதிய சட்டத்தை உருவாக்குவதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கழிவுப்பொருள் முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் நாயகம் உபாலி இந்திரரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்