English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
14 Jan, 2017 | 7:06 pm
கியூபாவில் இருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் கோரிச் செல்வோருக்கு கடந்த 20 ஆண்டுகளாக எளிதாக வழங்கப்பட்டு வந்த குடியுரிமையை அமெரிக்கா இரத்து செய்துள்ளது.
கியூப அதிபராக ஃபிடல் கெஸ்ட்ரோ இருந்தவரை அமெரிக்காவிற்கு அவர் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். அவரை ஒழித்துக்கட்ட பல்வேறு வழிகளில் அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. எதுவுமே கெஸ்ட்ரோவை ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த சூழ்நிலையில், அதிபராக ஒபாமா பதவியேற்ற பின் கியூபாவுடன் நெருக்கமான உறவை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார்.
கியூபாவில் இருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் கோரிச் செல்கிறவர்களுக்கு உடனடியாக அமெரிக்கா குடியுரிமை வழங்கும்.
சுமார் 20 ஆண்டுகளாக அங்கிருந்து சட்டவிரோதமாக தப்பிச் செல்லும் அனைவரும் குடியேற வசதியாக அமெரிக்கா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது.
தற்போது கியூபாவுடன் நெருக்கமாக நடந்து கொள்ளும் வகையில், முதற்கட்டமாக பதவி விலகும் முன் ஒபாமா இந்த குடியுரிமை வழங்கும் உரிமையை இரத்து செய்துள்ளார்.
இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இனி கியூபாவில் இருந்து யாரும் அமெரிக்கா செல்ல வேண்டும் என்றால் இருநாட்டு அரசுகள் மூலமே செல்ல முடியும். அதையும் மீறி சட்டவிரோதமாகச் சென்றால் அமெரிக்க சட்ட அமைச்சகத்தின் பிடியில் சிக்க வேண்டி ஏற்படும் என ஒபாமா அதிரடி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
கியூபா நாட்டுடன் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
17 May, 2022 | 12:38 PM
24 Mar, 2022 | 03:34 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS