இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான 7 நோயாளர்களுக்கு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை

இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான 7 நோயாளர்களுக்கு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை

இன்ஃப்ளுயன்சா வைரஸ் தொற்றுக்குள்ளான 7 நோயாளர்களுக்கு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை

எழுத்தாளர் Bella Dalima

14 Jan, 2017 | 4:19 pm

இன்ஃப்ளுயன்சா AH1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான 7 நோயாளர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த நோயாளர்களில் நான்கு ஆண்களும், இரண்டு பெண்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களைத் தவிர, மற்றுமொரு நோயாளர் அவசர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.

சிறுநீரகப் பாதிப்பிற்கு உள்ளானவர்களே இன்ஃப்ளுயன்சா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, அத்தியாவசியத் தேவையின் அடிப்படையிலன்றி சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் வைத்தியசாலையை நாடுவதைத் தவிர்க்குமாறும் கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

இன்ஃப்ளுயன்சா வைரஸ் பரவியுள்ளதால் சீல் வைக்கப்பட்டுள்ள கண்டி வைத்தியசாலையின் சிறுநீரக நோயாளர் பிரிவை இன்ஃப்ளுயன்சா நோயாளர்களுக்காக மாத்திரம் மீண்டும் திறந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஆலோசனைகள் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இருமல், சலி, தடிமண், தும்மல் ஏற்படும் சந்தர்ப்பங்களில் ஏனையோர் மீது அவை பட்டுவிடாமல் கைக்குட்டை பயன்படுத்துவது சிறந்தது என்றும் கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

அத்துடன் தமது கை, கால்களை துப்புரவுடன் பேணுவது அவசியமாகும் என்றும் அறிவுறுத்தினார்.

காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல், தடிமண் போன்ற அறிகுறிகள் காணப்படுமானால் உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் கண்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க மேலும் ஆலோசனை வழங்கினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்