அரசியலமைப்பு தொடர்பில் தனித்தனியாக தீர்மானிக்க கட்சிகளுக்கு உரிமை இல்லை – விஜேதாச ராஜபக்ஸ

அரசியலமைப்பு தொடர்பில் தனித்தனியாக தீர்மானிக்க கட்சிகளுக்கு உரிமை இல்லை – விஜேதாச ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

12 Jan, 2017 | 8:50 pm

உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ இன்று தெளிவூட்டினார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமா அல்லது அதிகாரங்கள் குறைக்கப்படுமா என்பன தொடர்பில் தனித்தனியாகத் தீர்மானிப்பதற்கு கட்சிகளுக்கு உரிமை இல்லை என நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு சபையின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும் எனவும் 2020 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய முறை தொடர்பில் தற்போது நிச்சயமற்ற நிலையே காணப்படுவதாகவும் விஜேதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்