பிரியாவிடை உரையின் போது அமெரிக்க மக்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஒபாமா

பிரியாவிடை உரையின் போது அமெரிக்க மக்களுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்த ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2017 | 11:19 am

நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற முற்போக்கான செய்தியை முன்வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது பிரியாவிடை உரையை அமெரிக்க ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக சிக்காகோவில் நிகழ்த்தினார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் ஜனவரி 20 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ள சூழலில், சிக்காகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் அமெரிக்க ஜனாதிபதியாக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

கடந்த வாரத்தில் எனக்கும், மிச்செலுக்கும் அதிகளவில் வாழ்த்துக்கள் வந்தன, அதற்காக மக்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி கூற விரும்புகிறேன் என்றார்.

ஒவ்வொரு நாளும் நான் மக்களிடமிருந்து ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண்டு இருக்கிறேன், அதுவே என்னை அமெரிக்காவின் சிறந்த ஜனாதிபதியாக மாற்றியது என்று கூறிய ஒபாமாவின் கண்களில் வந்த கண்ணீர் அமெரிக்க மக்களை நெகிழச் செய்தது.

தற்போது, உலகின் பலமான நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது, மேலும், வரலாற்றிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை அமெரிக்கா உருவாக்கியுள்ளது, நமது பொருளாதார வளர்ச்சியும், சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. எனினும் நாம் வளர இன்னும் நிறைய உயரம் இருக்கின்றது என்று இந்த உரையின் போது ஒபாமா தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மூலமே நாம் வளர்ச்சியடைய வேண்டும், அதுவே சாத்தியம் என்று கூறிய ஒபாமா, மக்களின் ஒற்றுமையால் மாத்திரமே மாற்றங்களும், வளர்ச்சிகளும் நிகழும் என்றார்.

8 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்துள்ளேன். ‘ஒன்றாகவே வீழ்வோம் அல்லது ஒன்றாகவே எழுவோம்’.

பயங்கரவாதம் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது, இதனை நமது குழந்தைகளுக்கு எடுத்துரைத்து அவர்களை சிறந்த பண்புள்ளவர்களாக வளர்க்க வேண்டும், மேலும் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் ஒபாமா கூறினார்.

அமெரிக்க வளர்ச்சியில், குடியேறியவர்களின் பங்கு முக்கியமானது என்றார், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

obama-3

obama-2

obama-1

ஒபாமா சிக்காகோவில் நிகழ்த்திய பிரியாவிடை உரை…..

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்