உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க FIFA ஒப்புதல்

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க FIFA ஒப்புதல்

உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க FIFA ஒப்புதல்

எழுத்தாளர் Bella Dalima

11 Jan, 2017 | 3:20 pm

FIFA என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து அமைப்பு, உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் தற்போதைய எண்ணிக்கையான 32 என்பதனை 48 ஆக மாற்றும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் 2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் அதிக அணிகளைப் பங்கேற்கச் செய்யும் விதமாக 16 குழுக்கள் செயற்படவுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் மூன்று அணிகள் இடம்பெறவுள்ளன.

இக்குழுக்களில் நடக்கும் போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் நாக் அவுட் (வெளியேற்றத்தை முடிவு செய்யும் சுற்று) சுற்றுக்கு தகுதி பெறும். நாக் அவுட் சுற்றில் 32 நாடுகள் விளையாடும்.

ஆனால், இந்த புதிய வடிவ உலகக்கிண்ண அட்டவணையின்படி FIFA உலகக்கிண்ண வெற்றியாளர்கள் தற்போதுள்ள எண்ணிக்கையை விட கூடுதல் போட்டிகளில் விளையாட வேண்டிய தேவை ஏற்படாது.

இந்நிலையில், FIFA உலகக்கிண்ண அணிகள் பட்டியலில் உருவாக்கப்படும் கூடுதல் இடங்கள் பெரும்பாலும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்