சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2744 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2744 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2744 பேர் பொலிஸ் சேவையில் இணைப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2017 | 9:03 am

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2,744 பேர் இன்று முதல் இலங்கைப் பொலிஸில் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் உத்தியோகத்தர்களின் நிர்வாக செயற்பாடுகள் தமது திணைக்களத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்படும் என சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் தினங்களில் சுமார் 500 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைத்துக்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்