ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமானது

ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமானது

ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருது கிறிஸ்டியானோ ரொனால்டோ வசமானது

எழுத்தாளர் Bella Dalima

10 Jan, 2017 | 8:52 pm

சுவிட்ஸர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் நேற்றிரவு விழாக்கோலம் பூண்டிருந்தது.

அந்த விழாக்கோலத்தில் சர்வதேச ரீதியில் கால்பந்தாட்ட போட்டிகளில் அதியுச்ச திறமைகளை வெளிப்படுத்திய வீர, வீராங்கனைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கண்கவரும் விதத்தில் நடந்தேறிய இந்த விருது வழங்கல் விழாவில் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதினை ரியல் மெட்ரிட் கழகத்தின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனதாக்கினார்.

இந்த விருதுக்கு பார்சிலோனாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் அந்துவான் கிறிஸ்மென் ஆகியோர் போட்டியிட்டிருந்ததோடு குறித்த இருவரையும் வீழ்த்தி முதல் தடவையாக ரொனால்டோ இந்த விருதினை சுவீகரித்தார்.

இந்த விருது தனக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் இந்த காலப்பகுதியிலேயே தனக்கு அதிக விருதுகள் கிடைத்துள்ளதாகவும் ரொனால்டோ மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு ரியல் மெட்ரிட் கழகத்தில் இணைந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்த கழகத்துக்காக 360 போட்டிகளில் விளையாடி 371 கோல்களைப் போட்டுள்ளார்.

இந்த விருது வழங்கல் நிகழ்வில் மற்றுமொரு அதியுச்ச விருதான ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீராங்கனை விருது அமெரிக்காவின் கர்லி லொய்டுக்கு (Carli Lloyd) இரண்டாவது தடவையாக வழங்கப்பட்டது.

மேலும், கால்பந்தாட்டப் போட்டிகளின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதுக்கு இத்தாலி கால்பந்தாட்ட அணியின் அத்லேடிகோ நேசியனல் பாத்திரமானமையும் சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்