ஹம்பாந்தோட்டை மோதலில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

ஹம்பாந்தோட்டை மோதலில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 10:06 am

உத்தேச ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று (07) கைது செய்யப்பட்ட 34 பேர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று (07) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் 21 பேர் எதிர்வரும் 09ஆம் திகதிவரையும், மேலும் இருவர் எதிர்வரும் 11ஆம் திகதிவரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டையில், சீனாவின் நிறுவனமொன்றுக்கு காணி வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்