புளோரிடா விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் இராணுவ வீரரிடம் தீவிர விசாரணை

புளோரிடா விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் இராணுவ வீரரிடம் தீவிர விசாரணை

புளோரிடா விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் இராணுவ வீரரிடம் தீவிர விசாரணை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 11:27 am

அமெரிக்க விமான நிலையத்தில் 5 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் இராணுவ வீரரிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாடர்டேல் விமான. நிலையத்தின் 2 ஆவது முனையத்தில் பயணிகள் தங்களது உடைமைகளை பெற்றுக்கொள்கின்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

இருப்பினும் அவர் தனது கைத்துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீரும் வரை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவம் நடந்த பகுதியில் உடனடியாக பொலிஸாரும், மீட்பு படையினரும் சூழ்ந்துகொண்டனர்.

பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து, அந்த விமான நிலையம் மூடப்பட்டது.

குறித்த சந்தேகநபர் சாண்டியாகோ, அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அங்கோரேஜ் என்ற இடத்தை சேர்ந்தவர். என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் அமெரிக்க இராணுவத்தின் பியுர்ட்டோ ரிக்கோ மற்றும் அலாஸ்கா தேசிய காவல் படை பிரிவில் சேர்ந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் அமெரிக்க பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்