ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 285 கைதிகள் விடுதலை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 285 கைதிகள் விடுதலை

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 285 கைதிகள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 11:04 am

ஜனாதிபதி பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு, 285 கைதிகள் இன்று பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.

அத்துடன், ஜனாதிபதியின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு, பல சமய நிகழ்வுகளும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சிறு குற்றங்களை புரிந்து சிறைத் தண்டணை அனுபவிக்கும் கைதிகளே விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 14 கைதிகளும், மஹர சிறையிலிருந்து 20 கைதிகளும், நீர்கொழும்பு சிறையிலிருந்து 25 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிப்பிரமானம் செய்து இரண்டு வருடங்கள் நிறைவை ஒட்டி இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்