ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

ஜனாதிபதி பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட நிகழ்வுகள்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 7:46 pm

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிலைபேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயம் எனும் தொனிப் பொருளில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்தியாவின் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

அனைவருக்கும் சுபீட்சம் எனும் தொனிப்பொருளில் அவர் இங்கு விசேட உரை நிகழ்த்தினார்.

ஜனநாயக அரச நிருவாகத்தின் இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்ட இந்த தேசிய நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வெளிநாட்டு பிரதிநிதிகள், இராஜதந்திரிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்ற இந்த நிகழ்வில், பல கலை அம்சங்களும் இடம்பெற்றன.

இதேவேளை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியை முன்னிட்டு 2200 தேரர்களுக்கு, ஜனாதிபதி மாளிகையில் இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர், காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 118 ஆவது ஜனன தினமும் இதன்போது நினைவு கூரப்பட்டது.

அஸ்கிரிய மகாநாயக்கர், வரகாகொட ஶ்ரீ ஞானரத்ன தேரர், அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தவுல்தென ஞானிஸ்ஸர தேரர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்தோடு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர், காலஞ்சென்ற, பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர் பண்டாரநாயக்கவின் 118 ஆவது, ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்று காலி முகத்திடலில் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட பலர், காலி முகத்திடலிலுள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், ஜனாதிபதியின் இரண்டாண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் பல சமய நிகழ்வுகளும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

இதேவேளை, நிலைபேண்தகு யுகத்தின் மூன்றாண்டு உதயத்தை முன்னிட்டு, தணிக்கை சபையின் புதிய கட்டடத்திற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி வவுனியா – தாண்டிக்குளம் கந்தசுவாமி கோயிலிலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இதேவேளை திருகோணமலை – வெருகல் பகுதியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பட்டது.

யுத்தகாலத்தில் உறுதிகளை தொலைத்தவர்களுக்கே காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைப்பட்டதுடன் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்பட்டன
இதேவேளை, வெருகல் வைத்தியசாலையில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் பண்டாரவளை சென்ஜோசப் பாடசாலைக்கு அருகாமையில் இருந்து – மநாகரசபை சுற்றுச்சூழல் பாதுகாப்போம் எனும் தொனியில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, 425 பேருக்கு ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் காணி உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் இருவருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கண்டி – தெல்தெனிய – கொட்டகங்க பகுதியில் மரம் நாட்டப்பட்டது.

ஜனாதிபதி பதவியேற்று இரு வருட பூர்த்தியை முன்னிட்டு கொட்டகலை கிறிஸ்டல் பாம் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இன்று 20 வீடுகள் கையளிக்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்