காலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

காலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

காலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 10:27 am

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரையான காலப்பகுதியில் காலி முகத்திடல் சுற்றுவட்டம் தொடக்கம் என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை காலை 10 மணித் தொடக்கம் பகல் ஒரு மணி வரை என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் தொடக்கம் ஜனாதிபதி மாளிகை வரையான வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

விசேட நிகழ்வொன்றின் காரணமாக இந்த போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்