ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 8 வருடங்கள்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 8 வருடங்கள்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டு இன்றுடன் 8 வருடங்கள்

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 7:51 pm

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் எட்டாவது நினைவு தினம் இன்றாகும்.

கொழும்பு – பொரள்ளை மயானத்தில், உள்ள சமாதிக்கு அருகில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில், உறவினர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர், சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.

தெபானம எம்.டி.வி எம்.பி.சி கட்டடத் தொகுதிமீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு 48 மணித்தியாலங்களின் பின்னர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார்.

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக சந்தேகிக்கும் இரண்டு சந்தேகநபர்களின் மாதிரி ஓவியங்களை கடந்த வருடம்
பெப்ரவரி 17ஆம் திகதி பொலிஸார் வெளியிட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்படி, லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீணடும் தோண்டி எடுக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தானே லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்ததாக கடிதமொன்றில் எழுதிவிட்டு ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் அண்மையில் பதிவானமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்