இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள்  கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2017 | 11:58 am

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு டோலர் படகுகளில் நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.

யாழ். நெடுந்தீவிற்கு அருகில் மீன்டித்துக் கொண்டிருந்த போது 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை மேலதிக விசாரணைகளுக்காக யாழ். கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னாருக்கு வடக்கு கடற்பிராந்தியத்தில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 04 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மற்றும் நெடுந்தீவு பகுதிகளில் நேற்றிவு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்