வட கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை

வட கடற்பரப்பில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 9:15 pm

வடபகுதியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் சமூக சீரழிவை ஏற்படுத்துவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வடக்கு கடற்பரப்பினூடாக நாட்டிற்கு கடத்தப்படுகின்ற போதைப்பொருட்கள் தரைவழியாக விநியோகஸ்தர்களை சென்றடைகின்றமை பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

வடக்கு கடற்பரப்பினூடாக இடம்பெற்றுவரும் போதைப்பொருள் கடத்தலுடன் மீனவர்கள் தொடர்புபடவில்லை என இலங்கை இந்திய மீனவர்கள் கூறுகின்றனர்.

மீனவர்கள் என்ற போர்வையில் இந்த சட்டவிரோத செயலை திட்டமிட்டு ஒரு குழுவினர் மேற்கொண்டுவருவதாக மீனவர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 1600 கிலோகிராம் கேரள கஞ்சாவும் தரைவழியில் கடத்தப்பட்ட 3200 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கடந்த ஒருவருட காலத்தில் மறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வட கடல் மார்க்கமாக நாட்டிற்கு கொண்டுவரப்படும் பேதைப்பொருள் பயணிகள் பஸ், பாரவூர்தி, வேன், கார் மற்றும் மோட்டார் சைக்கிள்லகளில் கடத்த முற்பட்ட சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் அவை கைப்பற்றப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

கடந்த 2016 ஆம் ஆண்டு கடற்பரப்பில் சுமார் ஆயிரத்து 600 கிலோகிராம் கேரள கஞ்சாவும் இரண்டு கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் பலரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்

2016 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் 2500 கிலோ கிராம் கேரள கஞ்சாவும், 400 பெட்டி போதை மாத்திரைகளும் பொலிஸாரல் கைப்பற்றப்பட்டன.

மன்னார் மாவட்டத்தில் 30.69 கிலோ கேரள கஞ்சாவும்,3.777 கிலோகிராம் ஹெரோய்னும், 38.14 கிலோகிராம் பாபுல் மற்றும் மூன்று கிலோகிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனைத் தவிர கிளிநொச்சி மாவட்டத்தில் 200 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 267 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 100 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்