ரயில் கடவைகளில் மணி ஒலியுடனான மின்சார கதவு அமைப்பதற்கு நடவடிக்கை

ரயில் கடவைகளில் மணி ஒலியுடனான மின்சார கதவு அமைப்பதற்கு நடவடிக்கை

ரயில் கடவைகளில் மணி ஒலியுடனான மின்சார கதவு அமைப்பதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 3:34 pm

ரயில் கடவைகளில் மணி ஒலியுடனான மின்சார கதவு அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் கடவைகளில் பயன்படுத்தப்படும் மூங்கில்களுக்குப் பதிலாக இந்த புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன குறிப்பிட்டுள்ளார்.

மணி ஒலியுடனான மின்சார கதவு அமைக்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

முதலாவது கட்டத்தின் கீழ் 300 இடங்களில் இவை பொருத்தப்படவுள்ளது, இதற்கான கேள்வி மனு தொடர்பான பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் 200 இடங்களுக்கு மின்சார வேலிகளை பொருத்துவதற்கான கேள்வி மனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் மூங்கில்கள் பயன்படுத்தப்பட்டுள்ள கடவைகள் 670 காணப்படுவதாகவும் அனைத்து இடங்களுக்கும் 3 வருடங்களுக்குள் நவீன மின்சார கதவுகள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்