நிலையான அபிவிருத்தி 3 வருட கொள்கை பிரகடனம் ஜனாதிபதியினால் வெளியீடு

நிலையான அபிவிருத்தி 3 வருட கொள்கை பிரகடனம் ஜனாதிபதியினால் வெளியீடு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 2:49 pm

நிலையான யுகத்தின் அபிவிருத்தி இலக்கு இன்று ஜனாதிபதி செயலகத்தில் வெயிடப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் 2030ஆம் ஆண்டு வரையான நிலையான அபிவிருத்தி இலக்கை அடிப்படையாக வைத்து இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி யோசனைகள் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.

நிலையான அபிவிருத்திக்கு தேசத்தின் பிரார்த்தனை என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டு, நிலையான அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள்வதற்காக தேசிய கொள்கை வகுப்பு இடம்பெறுவதுடன், 17 அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் 17 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து அதன்மூலம் கொள்கைகள் வகுக்கப்படவுள்ளன.

2030ஆம் ஆண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு தொடர்பான விசேட குழுவின், விடயங்களை அறிக்கையிடும் பொறுப்பு பேராசிரியர் மொஹான் முனசிங்கவுக்கு ஒப்படைக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்