நல்லதண்ணி பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

நல்லதண்ணி பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

நல்லதண்ணி பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 5:42 pm

ஹட்டன் நல்லதண்ணி – மோகினி எல்ல நீர்வீழ்ச்சி பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நல்லதண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்கிக்கு கீழுள்ள மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கம் சங்கமிக்கும் இடத்தில் இந்த சடலம் ஒதுங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்த்தேக்கப் பகுதியில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த சிலரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

50 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை இதுவரை அடையாளம் காணமுடியவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நல்லதண்ணி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்