சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளியின் சடலம் மீட்பு

சாவகச்சேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளியின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 8:04 pm

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் முன்னாள் போராளி ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி – டச்சுறோட்டில் வசித்துவரும் 34 வயதுடையை தர்மசேன ரிஷிகரன் என்றழைக்கப்படும் இனியவன் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முன்னாள் போராளி ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்