சரத்குமார குணரத்ன விளக்கமறியலில்

சரத்குமார குணரத்ன விளக்கமறியலில்

சரத்குமார குணரத்ன விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 6:04 pm

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் கடற்றொழில் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் முன்னாள் பிரதியமைச்சர் சரத்குமார குணரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய அவர் கைதுசெய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடற்றொழில் பிரதியமைச்சராக பதவிவகித்த போது அமைச்சுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபா பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீ்ழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்