ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் தொடர்பில் தகவல் இல்லை

ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் தொடர்பில் தகவல் இல்லை

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 3:13 pm

ஒலுவில் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 ஆம் திகதி கடலுக்கு சென்ற இந்த மீனவர்கள் இதுவரை கரை திரும்வில்லை என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று மாலை அறிவித்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மீனவர்கள் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் கடற்படை பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது

இவ்வாறான சம்பவம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம் அறிவிக்கவில்லை என கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்