உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை ஏற்க முடியாது

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 4:24 pm

அனைத்து உறுப்பினர்களும் கையொப்பம் இடாத காரணத்தினால் உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாதென உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய மேன்முறையீடு தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் அசோக்க பீரிஸ் உள்ளிட்ட சிலர் அறிக்கையை தம்மிடம் கையளிப்பதற்கு முற்பட்ட போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஐவரடங்கிய குழுவின் இரண்டு அங்கத்தவர்கள் இந்த அறிக்கையில் கையொப்பம் இடவில்லை என அசோக்க பீரிஸ் அறிக்கயை கையளிக்க சென்றிருந்தபோது தெரிவித்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவின் அனைத்து உறுப்பினர்களதும் கையொப்பத்துடன் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்